சிலர் கப்ருகளுக்கு விளக்கேற்றுகிறோம், பத்தி கொளுத்துகிறோம் என்றெல்லாம் நேர்ச்சை செய்து கொள்கிறார்கள். நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும். அதை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். நேர்ச்சையும் வணக்கமே என்பதற்கு பின்வரும் வசனம் சான்றளிக்கிறது.
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُون 046.005
.....இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றி வைத்தனர். நீண்ட வேதனையுடைய நாளுக்கும் பயந்து கொண்டிருந்தனர். அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் ஆகாரமளித்தும் வந்தனர். (அல்குர்அன் 76:7,8)
وَمَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَار 002.270ٍ
(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும், அல்லது நீங்கள் என்ன நேர்த்திக் கடன் செய்தபோதிலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிகிறான். அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் (ஒருவருமே) இல்லை. (அல்குர்அன் 2:270)
அல்லாஹ் அல்லாதவைகளுக்கு அறுத்துப் பலியிடுவது "ஷிர்க்" அகும்
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
108.002 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
நீர் உமது இறைவனைத் தொழுது குர்பானி (செய்து) கொடுத்து வாரும். (அல்குர்அன் 108:2)
நபி அவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ் அல்லாதவைகளுக்கு அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிக்கிறான்.'' (ஸஹீஹ முஸ்லிம்)
இவ்வாறு பலியிடுவதில் இருவகையான குற்றம் உள்ளது.
1) அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுத்துப் பலியிடுவது.
2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரைக் கூறுவது.
இந்த இரண்டுமே ஹராமாகும்.
சிலர் ஒரு வீட்டையோ நிலத்தையோ வாங்கினால் அல்லது கிணறு தோண்டுவதாக இருந்தால் அங்குள்ள ஜின்(பேய், பிசாசு)களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடுவதாக எண்ணி பிராணிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் ஷிர்க்கான செயலாகும்.
அல்லாஹ் விலக்கியதை அகுமாக்குவது, அல்லாஹ் அகுமாக்கியதை விலக்கிக் கொள்வது "ஷிர்க்" அகும்
அல்லாஹ் விலக்கியதை ஆகுமாக்குவது, அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கிக் கொள்வது அல்லது அல்லாஹ்வைத் தவிர பிறருக்கும் இவ்வுரிமை உண்டென நம்புவது அல்லது ஷரீஅத்தின் தீர்ப்பை விட்டுவிட்டு அது அல்லாத வேறு வகையான தீர்ப்புகளை (எவ்வித நிர்பந்தமுமின்றியே) தேடிச்செல்வதுடன் அதை அனுமதிக்கப்பட்டதாகவும் நம்புவது என இவையனைத்தும் சமுதாயத்தில் பரவி நிற்கும் ஷிர்க்கான காரியங்களாகும்.
இவையனைத்தும் ஷிர்க் என்பதற்கு பின்வரும் திருவசனம் சான்றாகும்.
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ 009.031
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்அன் 9:31)
அதீ ஆப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் இவ்வசனத்தை ஒதிக் காட்டியபோது "கிறிஸ்துவர்கள் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் வணங்கவில்லையே' என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் "ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக எற்றுக் கொள்கிறார்கள். எனவே இதுதான் கிறிஸ்துவர்கள் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்.'' என்றும் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி
அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நேர்ச்சை