إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ''அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வ†ீ மூலம் அறிவித்ததனால்.
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிாிவினர்களாகப் பிாிந்து வருவார்கள்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குாிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குாிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99: 1-8)
قُل لاَّ أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلاَ نَفْعًا إِلاَّ مَا شَاء اللّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاء أَجَلُهُمْ فَلاَ يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ(நபியே!) நீர் கூறும் ''அல்லா‹ நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." (அல்குர்ஆன் 10:49)
சமீப காலத்தில் சுனாமி பேரலைகள், கட்ரினா, ரீட்டா வில்மா என அடுக்கடுக்காக கடும் புயல்கள், நில நடுக்கங்கள், கடும் மழை பெரும் வெள்ளம் காட்டுத் தீ என பல இயற்கை சீற்றத்தால் உலகில் பல்லாயிரம் மக்கள் மாண்டு வருகிறார்கள். பல்லாயிரம் கோடி பொருள் சேதம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதல்லாமல் ஓ&ே#402;ானில் ஓட்டை, சுற்றுச் சூழல் மாசுபடல் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வடியும் நிலை. அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல ஊர்கள், நாடுகள் நீரில் மூழ்கி அழியும் நிலை என உலகம் அழிவை நோக்கி விரைகிறது.
எல்லாம் வல்ல ஏக இறைவன் தன் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் மூலம் எச்சரித்த எச்சரிக்கைகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் உலகம் அழியத்தான் போகிறது. உலக அழிவுக்குச் சமீபமாக உள்ள இந்த நிகழ்வுகள் கொண்டு மனிதன் பாடம் கற்க வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மனிதன் மனிதனாக மனித நேயத்துடன் வாழ, வாழ வைக்க முன்வரவேண்டும்.
இந்த பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களின் துயரங்களை போக்க மனித ஆர்வலர்கள் எண்ணற்றோர் களத்தில் குதித்து பெரும் முயற்சிகள் எடுப்பதை கடந்த டிசம்பர் 26லிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மனித நேயத்தின் வெளிப்பாடாகும். இந்தப் பேரழிவுகளால் மக்கள் படும் கடும் துன்பத்தை நேரடியாகப் பார்த்ததால் உள்ளம் உருகி, அத்துன்பத்தைப் போக்க தன்னால் முடிந்ததைச் செய்ய முன்வருகிறார்கள் மனித நேய ஆர்வலர்கள். இதுவே மனித பண்பாடாகும். சகமனிதர்களின் துன்பங்கள், துயரங்களில் தானும் பாங்கு கொண்டு அத்துன்பங்களைப் போக்க பாடுபடுவது புனிதமான செயலாகும்.
மனிதர்கள் தங்களின் புறக்கண்களால் பார்க்கும் இந்தக் கொடிய துன்பங்களைவிட பல மடங்கு கொடிய துன்பங்களை தங்களின் அகக்கண்களால் காணத்தவறிவிடுகிறார்கள். இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தும் மரணத்தோடு முடிந்துவிடும். அதன்பின் தொடர்வதில்லை. ஆனால் மறுமைத் துன்பங்களுக்கோ எல்லையோ முடிவோ இல்லவே இல்லை. தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வுலகில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து நெஞ்சுருகி இரவு பகலாகப் பாடுபட முன்வரும் மனிதநேய ஆர்வலர்கள், மறுமைத் துன்பத்தைப் போக்க முன்வராத காரணம் என்ன? ஒன்றில் மறுமையைப்பற்றி அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருக்கலாம்; அல்லது அரைகுரை நம்பிக்கையுடன் இருக்கலாம். மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மறுமை என்று ஒரு அசலான நிரந்தரமான வாழ்க்கை நிச்சயமாக இருக்கிறது.
தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது மனிதன் எப்படி இவ்வுலக வாழ்க்கைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருந்தானோ, அதேபோல் இவ்வுலகில் இருக்கும் மனிதன், மறு உலகைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். ஆனால் அதற்கு மாறாக எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்க்கையை மனிதன் கர்ப்பப்பையிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னரே எப்படி அறிந்து கொண்டானோ அதே போல், இவ்வுலகிலிருந்து மறு உலக அடைந்த பின்னரே அதை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான்.
அந்த மெய்யான மறு உலக வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் இல்லாத இன்பகர வாழ்க்கையை ஒருவன் அடைய விரும்பினால் தன்னையும் மக்கள் அனைவரையும் மற்றும் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட மலக்குகளையோ, ƒின்களையோ, மனிதர்களையோ, சிலைகளையோ இதர எந்த படைப்பையுமே இணையாக்காமல் மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகிதரர்கள் பின்னால் செல்லாமல் அவர்களை இடைத்தரகர்களாக, ரப்புகளாகக் கொள்ளாமல், இறைவனுடைய இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனையும், அதன் செயல் வடிவமான இறுதி நபியின் ஆதாரப்பூர்வமான நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றக் கடமைப்பட்டுள்ளான்.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)
உலகம் தன் முடிவை நோக்கி...!