அல்லாஹ்வின் விதிவிலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும்-பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன். நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக கழித்த நாட்கள் தான் எத்தனை? ஊர் சுற்றித் திருந்த நாட்கள் தான் எத்தனை? சந்தோ„த்திலும் துக்கத்திலும் கழித்த நாட்கள் தான் எத்தனை? ஒரு தேவையும் இல்லாமல் பயணம் செய்த நாட்கள் தான் எத்தனை? வாழ்க்கையில் வீணாக கடந்த நாட்கள் தான் எத்தனை? இப்படி நம் வாழ்க்கையில் நாட்கள் கடந்து கொண்டே செல்கின்றன.
இப்படி நாம் நாட்களை கழித்து இருந்தாலும், நாம் இவ்வுலகில் தங்கியிருந்த நாட்களை கூட்டினால் ஒரு சில நாட்கள் தங்கி இருந்தோம் என்று தான் தோன்றும்.ஏனென்றால், நாம் இது வரை வாழ்ந்த நாட்களை பின்னோக்கிப் பாருங்கள்.வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப்பாருங்கள் .நாம் தங்கியிருந்த நாட்களை பின் நோக்கிப் பார்த்தால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களின் நிகழ்வுகளைத் தான் நமக்கு அட்டவனைப்படுத்த முடியும். வாழ்வின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நமக்கு மறந்துவிட்டன. நேற்று ஒரு தவறு செய்திருப்போம். அந்தத் தவறை மன்னிக்க இறைவனிடம் பிரார்த்தனைச் செய்திருப்போம்.ஆனால் அதே தவறைத் திரும்பவும் செய்ய முயற்சிப்போம். எவ்வளவு பலகீனமான நிலையில் நாம் இருக்கிறோம்.
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி அவர்கள் இவ்வுலகில் தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். (அல்குர்ஆன் 79:46)
நாம் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையானது, வாழப்போகும் வாழ்க்கையானது, பஸ்ஸில் இருந்து உறங்குபவனின் நிலையைப் போன்றது. பŠ…ிலிருந்து உறங்குபவனின் நிலைதான் நம் வாழ்க்கை நிலையும். பŠ…ானது எவ்வளவு வேகத்தில் சென்றாலும் நமக்குத் தெரியாது. பிற மனிதர்களின் தோளோடு நம் தலை சாய்ந்தாலும் நமக்குத் தெரியாது. ஆனால் பŠ…ானது ஏதாவது ஒரு இடத்தில் திடீரென்று நிற்கும் போது தான் நம் தலை முன் இருக்கையில் படும்போது தான் நமக்கு விழிப்பு வரும். நமக்கு ஞாபகம் வரும் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்று. இதே மாதிரி நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பகலையும், இரவையும், காலையையும், மாலையையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நாம் மரணம் அடைந்த பிறகுதான் எத்தனை நாட்கள் இந்த உலகில் தங்கியிருந்தோம் என்று தெரியும்.
இன்னும் அவர்களிடையே ஒருவரை ஒருவர் கேட்டு கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம். அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்? எனக் கேட்டார். ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம் எனக் கூறினார்கள்.........(அல்குர்ஆன்18:19)
எண்ணப்பட்ட பல வருடங்கள் தூங்கிய குகையிலிருந்தோர் கூறியது என்ன? "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" என கூறினார்கள்.
இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லா‹ எப்படி உயிர்ப்பிப்பான்? என்று (வியந்து) கூறினார். ஆகவே அல்லா‹ அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர் பெற்றெழும்படிச் செய்து எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்? என்று அவரைக் கேட்டான். அதற்கவர் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன் என்று கூறினார். (அல்குர்ஆன் 2:259)
நூறாண்டுகள் வரை நித்திரையில் இருந்தவரும் கூறியது என்ன? ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தேன் என்பதே.
மனிதர்களின் ஆயுள் நாட்களும் கூட குறைந்து கொண்டே வருகின்றன. நேற்று வரை 80-90 வயது வரை மனிதர்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்றோ 50 வயது தாண்டுபவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி இந்தப் பூமியில் தங்கியிருக்கப் போகும் நாம் எவ்வளவு ஆணவமாக நடக்கிறோம். இறை நியதிக்கு கட்டுப்படாமல் நாம் வகுத்த சட்டங்களின் படி அல்லவா செயல் படுகின்றோம். அல்லா‹வின் விதி விலக்குகளை ஏற்காமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் தங்கியிருக்கும் இந்த சொற்ப நாளில் நன்மையான காரியங்களை செய்து மகத்தான வெற்றி பெற முயற்சி செய்ய மாட்டோமா? அல்லா‹வின் வேதனை வந்தால் அதைத் தடுப்பவர்கள் யார்? நம் எல்லோரிடமும் நம்மை படைத்த இறைவன் கேட்கப் போகும் கேள்வி ஒன்று உண்டு. சூரத்துல் முஃமினில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
ஆண்டுகளில் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்? என்று கேட்பான். ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக! என்று அவர்கள் கூறுவார்கள். ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால் என்று (இறைவன்) கூறுவான். நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டீர்களா? (என்று இறைவன் கேட்பான்) (அல்குர்ஆன் 23:112-115)
எங்கள் இறைவா! நாங்கள் தங்கியிருக்கப் போகும் இந்த சொற்ப நாளில் அதிகமான நற்கருமங்கள் செய்து மகத்தான வெற்றி பெற உதவி செய் யாஅல்லாஹ்!
இவ்வுலகில் தங்கியிருக்கப் போகும் நாட்கள்தான் எத்தனை?