ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தாவின் போது
سُبْحَانَ رَبَّيَ الأَعْلَى
"ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்று ஓதுவார்கள்.
பொருள்: உயர்வுமிக்க என் இறைவன் தூயவன். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்
سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
"ஸுப்புஹுன் குத்துஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்று கூறுவார்கள்.
பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் இறைவன் தூய்மையானவன், பரிசுத்தமானவன். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃக்பிர்லீ என்று நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அபூதாவூத்
பொருள்:இறைவா! என்னை மன்னிப்பாயாக! இறைவா! என்னை மன்னிப்பாயாக!
நபி صلى الله عليه وسلم இரண்டு சஜ்தாக்களுக்கிடையே
اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
"அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ வஆஃபினி வஹ்தினீ வர்ஜுக்னீ" என்று ஓதுவார்கள்.
பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு தேவையானவற்றை வழங்குவாயாக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ
ஒற்றை ரக்அத்களிலிருந்து எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி எழவேண்டும்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றிவிட்டு எழும்போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள்" அறிவிப்பவர்: மாலிக் பின்அல் ஹூவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ
இரண்டாம் ரக்அத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், நஸயீ
இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக்கொண்டார்கள். கடைசி இருப்பின்போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
Labels: நபி வழியில் நம் தொழுகை