அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.
“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,
“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)
உமாடிபின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)
அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)
நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)
தொழுகையின் முக்கியத்துவம்
Labels: நபி வழியில் நம் தொழுகை
ரமழான் இரவுத்தொழுகை
"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்
பிற்காலத்தில் "தராவீஹ்" என்றழைக்கப்படும் ரமழான் இரவுத் தொழுகை
நபி நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவுத்தொழுகை விஷயமாக (மக்களுக்கு) வலியுறுத்திக் கட்டளையிடாமல், "ரமழானில் ஈமானோடும், நன்மைகிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். பின்னர் அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சி காலத்திலும், உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சிக் காலத்தின் ஆரம்ப கட்டத்திலும் நிலைமை இவ்வாறே நீடிதிருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான இமாம் ஜுஹ்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள். அறிவிப்பாளார்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்
ரமழான் இரவுத்தொழுகை ஒரு சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?
ஒரு முறை நபி صلى الله عليه وسلم அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில் (முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி صلى الله عليه وسلم அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) "தஷஹ்ஹுது, அம்மாபஃது" ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. அறிவிப்பாளர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான் இரவுத்தொழுகையில் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் இரவுத்தொழுகை 11ரகஅத்துகள்.
அபூலைமத்திப்னு அப்திர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒருமுறை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் ரமழானில் நபி صلى الله عليه وسلم அவர்களின் இரவுத்தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு "ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரகஅத்துகளைவிட அதிகமாக அறவே தொழுததில்லை" என்று கூறிவிட்டு (முதலில்) 4 ரகாஅத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். (என்னால் அதனழகை எடுத்தியம்ப இயலாது) பிறகு 4 ரகஅத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். பிறகு 3 ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அபூலைமத்துப்னு அப்திர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் 8+3=11 என்ற அமைப்பில்தான் தொழவைத்துள்ளார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு ரமழானில் ஓரிரவு 8 ரகஅத்துகளும், வித்ரும் தொழவைத்தார்கள். மறுநாள் நாங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதிகாலை வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) வித்ரு தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டு விடும் என்பதைப் பயந்து (இருந்து)விட்டேன் என்றார்கள். அறிவிப்பாளர்: ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: இப்னுகுஜைமா
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்களின் இரவுத்தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்டபோது "ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரகஅத்துகளுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை" என்று அவர்கள் பதில் அளித்திருப்பதன் மூலம், ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், வழக்கமாக தினசரி தினசரி 8+3=11 ரகஅத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ரமழான் இரவுத்தொழுகை 11ரகஅத்துகள் என்பதற்கு நபி صلى الله عليه وسلم அவர்களின் அங்கீகாரம்
ஒருமுறை உபையுப்னுகஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமாழான் இரவில் நான் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர்கள் உபையு அவர்களே! அது என்ன? என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன் (அதிகமாக) ஓத இயலாதவர்கள் ஆகையால் உமது தொழுகையை பின்பற்றி நாங்களும் தொழுது கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8 ரகஅத்துகள் தொழ வைத்துவிட்டு பிறகு வித்ரும் தொழவைத்தேன் என்றார். அதற்கு அவர்கள் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மெளனமானது அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகி விட்டது. அறிவிப்பாளர்: ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: அபூயஃலா, தப்ரானீ
உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி ஜமாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்
நான் ரமழானில் ஓரிரவு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன் அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக இருந்து கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுது கொண்டிருந்தார்கள். அது சமயம் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இம்மக்கள் அனவைரையும் ஒரே இமாமுக்குப்பின் தொழும்படி செய்தால் மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையின்கஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனவைரையும் ஒன்று சேர்த்தார்கள்.
பிறகு மற்றொரு இரவு அவர்களுடன் புறப்பட்டு வந்தேன். மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு, "புதிய இவ்வேற்பாடு மிகச்சிறப்பாயுள்ளது" என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, "இவர்கள் நின்று தொழுதுகொண்டிருக்கும் இந்நேரத்தைவிட, இவர்கள் (தொழுதுவிட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு) மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர். அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி
மற்றொரு அறிவிப்பில் உபையுபின் கஃபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களையும், தமீமுமுத்தாரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களையும், உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் 11 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள் என்று உள்ளது. அறிவிப்பாளர்: ஸாயிபுபின்யஜீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா மாலிக்
இத்தொழுகையை இரவின் அனைத்துப் பகுதியிலும் தொழுதல்
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றோம். ரமழானில் 7 நாட்கள் மீதம்மிருக்கும் வரை (22நாட்கள்) எங்களுக்கு அவர்கள் தொழவைக்கவில்லை. அதற்குப்பிறகு (23வதுநாள்) இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை ((சுமார்10மணி) எங்களுக்கு தொழவைத்தார்கள்.
பிறகு 24வது நாள் இரவில் பாதிவரை (சுமார்12) தொழவைத்தார்கள். பிறகு ரமழானில் மூன்றுநாள் மீதமிருக்கும்வரை அவர்கள் தொழவைக்கவில்லை. 27வதுநாள் ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4மணி) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகைக்கு தமது மனைவிமார்களையும், குடும்பத்தாரையும் அழைத்துக்கொண்டார்கள். அறிவிப்பாளர்: அபூதர்ரு رَضِيَ اللَّهُ عَنْهُ ,திர்மிதீ (ஹதீஸ் சுருக்கம்)
மேற்காணும் அறிவிப்பில் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரே தொழுகையைத்தான் பல நேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்று நோக்கும்போது இஷா தொழுகைக்குப்பின் ஸஹர் நேரம் முடிய சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால் வரை தொழப்படும் தொழுகைதான் அது என்பது புலனாகிறது.
இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் - இரவுத்தொழுகை, தஹஜ்ஜுத், வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. "தராவீஹ் தொழுகை" என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் தாமாக அதிகப்படுத்தி தொழப்படும் 20ரகஅத் இரவுத் தொழுகைக்கு மக்கள் சூட்டிக்கொண்ட பெயராகும்.
"வித்ரு' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்றுதான்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ருக்கு முன்பு) வித்ரு தொழுதுள்ளாகள். அறிவிப்பாளர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ , புகாரி, முஸ்லிம்
மேலும் ஜாபிருபின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் வாயிலாக "இப்னுகுஜைமா"வில் பதிவாகியுள்ள இதே தொடரில் மேற்காணும் அறிவிப்பில் "நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த "வித்ரு தொழுகை" உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடும் என்பதை பயந்து இருந்துவிட்டேன் என்றார்கள்" என்ற வாசகமே நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவுத் தொழுகைக்கு "வித்ரு" என்று கூறியிருப்பதானது "வித்ரு" என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொரு பெயர்தான் என்பதை உர்ஜிதம் செய்கிறது. எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது.
Labels: நபி வழியில் நம் தொழுகை
சுன்னத் தொழுகைகள், உபரியான வணக்கங்கள்,
உபரியான வணக்கங்கள்
அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக இந்த மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்கு தண்டனையும் வழங்குகின்றான்.
நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி (صلى الله عليه وسلم அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள்,"நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை"என்றார்கள்
அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உடனே அவர்,அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.
அவரிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ்(ரழி)நூல் : புகாரி
இந்த ஹதீஸில் கடமையைத்தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுவதிலிருந்து கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது என்பதை அறிய முடிகின்றது. எனினும் ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வ மூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. [ஏனெனில்] என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா(ரலி) நூல் : புகாரி
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹ்தீஸ் விளக்குகின்றது. கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் எற்படலாம். இந்தக் குறை பாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கிவிடக் கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி[ரலி] நூல் : தாரமீ
கடமையான வணக்கங்களில் எற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி வடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை எற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறை வெற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்
கடமையான தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளைத் தொழுது வந்துள்ளனர்.இவை தவிர குறிப்பிட்ட பெயரையுடைய, உதாரணமாக லுஹா தொழுகை,மழைத் தொழுகை இன்னும் இது போன்ற பெயர்களில் அமைந்த சுன்னத் தொழுகைகளும் உள்ளன.
ஃபஜ்ருடைய முன் சுன்னத்
ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரகஅத்துக்களாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகை க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா [ரலி] நூல்: புகாரி
பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி صلى الله عليه وسلم] அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருக்கு முன்சுன்னத் தொழும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளதாலும், அத்தொழுகையை சிறப்பித்துக் கூறியுள்ளதாலும் பஜ்ருடைய முன் சுன்னத்தை நாம் தவறவிடாமல் கவனமாகத் தொழ வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுபவர்களாக இருந்தனர். அவ்விரண்டு ரகஅத்துகளிலும் சூரத்துல் பாத்திஹாவை ஒதினார்களா என்று நான் எண்ணுமளவுக்கு சுருக்கமாகத் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல்: புகாரி முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இகாமத் தனது காதுகளில் விழுந்து விட்டதை போல் சுபுஹ் தொழுகையின் முன் இரண்டு ரகஅத்துகளை (விரைந்து)தொழுவார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி
பஜ்ருடைய சுன்னத்தில் ஒத வேண்டியவை
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பஜ்ருடைய இரண்டு ரக அத்துகளில் குல்யா அய்யுஹல் காஃபிரூன் மற்றும் குல்ஹு"வல்லாஹு" ஆகிய அத்தியாயங்களை ஒதுவார்கள். அறிவிப்பவர் : அபூஹ"ரைரா[ரலி] நூல்: முஸ்லிம்
வலப்புறமாகப் படுக்கவேண்டுமா?
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக்கொள்வார்கள். அறி: ஆயிஷா [ரலி] நூல் : புகாரி
பஜ்ருக்கு முன் தொழாவிட்டால்
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒருவரை சுபுஹ"க்குப் பின் இரண்டு ரக அத்துகள் தொழக் கண்டார்கள் அப்போது அவர்கள்,"சுபுஹ் தொழுகை இரண்டு ரகஅத்துகள்தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்,"சுபுஹ"க்கு முந்திய இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லை, அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி صلى الله عليه وسلم அவர்கள் மவ்னமாகி விட்டார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர்[ரலி] நூல்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா
யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ"ரைரா[ரலி] நூல்: திர்மிதி
லுஹருடைய முன் சுன்னத்
நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், ஜும்ஆ வுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்)தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி
நான் ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் உபரியான வணக்கத்தை பற்றி வினவினேன். அதற்கு அவர்," நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னுடைய வீட்டில் லுஹருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுது விட்டு, புறப்பட்டுச் சென்று மக்களுக்குத் தொழவிப்பார்கள். பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்து இரு ரகஅத்துகள் தொழுவார்கள்" என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஷிக்கீர்[ரலி] நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் லுஹர் தொழுகைக்குமுன் நான்கு ரகஅத்து களையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும் விடவே மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா[ரலி] நூல் : புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளைத் தொழவில்லை என்றால் அந்நான்கு ரகஅத்துகளை லுஹருக்குப் பின் தொழுவார்கள். அறிவிப்பவர் : அயிஷா[ரலி] நூல் : திர்மிதி
மேற்கண்ட ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸ் லுஹருக்கு முன்சுன்னத் இரண்டு ரகஅத்துகள் எனவும், இரண்டாவது ஹதீஸ் நான்கு ரகஅத்துகள் எனவும் குறிப்பிடுகின்றன. இரண்டு ஹதீஸ்களையும் முரண்பாடில்லாமல் விளங்கவேண்டும்.அதாவது சில சமயங்களில் இரண்டு ரகஅத்துகளையும் சில சமயங்களில் நான்கு ரக அத்துகளையும் தொழுதார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே இரண்டு அல்லது நான்கு ரகஅத்துகள் லுஹருக்கு முன் சுன்னத்தாக தொழுது கொள்ளலாம்.
லுஹருடைய பின் சுன்னத்
நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரகஅத்துகளையும், லுஹருக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், மக்ரிபுக்கு பின் இரண்டு ரகஅத்துகளையும், இஷாவுக்கு பின் இரண்டு ரக அத்துகளையும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரகஅத்துகளையும் தொழுது இருக்கிறேன். மக்ரிப், இஷா (தொழுகையினுடைய சுன்னத்) தொழுகைகளை நபி صلى الله عليه وسلم அவர்களது வீட்டில் தொழுது இருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு உமர்[ரலி] நூல் : புகாரி
யார் லுஹருக்கு முன்பு நான்கு ரகஅத்துகளும் பின்பு நான்கு ரகஅத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் செவியுற்றேன். அறிவிப்பவர் : உம்மு ஹபீபா[ரலி] நூல் : திர்மிதி
அஸருடைய முன் சுன்னத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர் : அலி[ரலி] நூல் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா
நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர்: அலி[ரலி] நூல்: அபூதாவூத்
மக்ரிபுடைய முன் சுன்னத்
மக்ரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! விரும்புகிறவர் மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்(ரலி) நூல்:அஹ்மத்,புகாரி,அபூதாவூத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அறிவிப்பவர் : அப்துல்லஹ் பின் முகப்பல்[ரலி]நூல் : இப்னு ஹிப்பான்
மஃரிபுடைய பின் சுன்னத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்ரிபுக்குப் பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா[ரலி] நூல்: முஸ்லிம்,அஹ்மத், அபூதவூத்,திர்மிதி
இஷாவுடைய முன் சுன்னத்
இஷாவுக்கு முன்சுன்னத் உள்ளதா என்பதற்கு நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் ஒவ்வொரு தொழுகைக்கும் முன் சுன்னத் இருக்கின்றது என்று பொதுவாக ஹதீஸ் உள்ளதால் அதனடிப்படையில் இஷாவுக்கு முன் சுன்னத் தொழலாம். ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகப்பல்[ரலி] நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயி
இஷாவுக்குப் பின் சுன்னத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இஷாவுக்குப்பின் இரண்டு ரகஅத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர்[ரலி] நூல்: புகாரி,முஸ்லிம், அஹ்மத்.
ஜும்ஆவுக்குப் பின் சுன்னத்
இப்னு உமர்(ரலி) அவர்கள் ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்களை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் இதை செய்தார்கள் என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாபிஃ நூல்: அபூதாவூத்
உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத்
மேற்கண்ட ஹதீஸ்களில் ஜும்ஆவுக்குப் பின் சுன்னத் இரண்டு ரக்அத்துகள் என்றும் நான்கு ரக்அத்துக்கள் என்றும் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.எனினும் முதலாவது ஹதீஸில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வீட்டிற்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இரண்டிரண்டாகத் தொழுதல்
இரவிலும் பகலிலும் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமென்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்:நஸயீ,தாரமீ
உங்கள் இல்லங்களில் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி
தஹிய்யத்துல் உலூ
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சுவர்க்கத்தில் நான் கேட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு பிலால் (ரலி) "இரவிலோ பகலிலோ நான் உலூ செய்தால் அவ்வுலூவின் மூலம் நான் தொழ வேண்டும் என்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி
தஹிய்யத்துல் மஸ்ஜித்
மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், "நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது" என்று கேட்டார்கள்.
அதற்கு,"நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கின்றார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)" என்று பதில் சொன்னேன்.
உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ
லுஹா தொழுகை
உங்களில் ஒருவர் தனது எலும்பு மூட்டுகளுக்காக தர்மம் வழங்க வேண்டும்.
(நீங்கள் கூறுகின்ற) ஒவ்வொரு சுபுஹானல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு லாயிலாஹ இல்லல்லாஹ்வும் தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். முற்பகல் நேரத்தில் இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது இவை அனைத்திற்கும் போதுமான தாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்
யார் உலூச் செய்தவராக கடமையான தொழுகைக்குப் புறப்பட்டு வருகின்றாரோ அவரது கூலி இஹ்ராமுடன் ஹஜ் செய்தவரின் கூலியை போன்றதாகும். யார் லுஹா தொழுகையைத் தவிர வேறு எதற்காகவும் தன்னை சிரமப் படுத்திக் கொள்ளாமல் புறப்பட்டு வருகிறாரோ அவரது கூலி உம்ரா செய்தவரின் கூலியைப் போன்றதாகும் இரு தொழுகைகளுக்கிடையே எவ்வித தீமையான காரியமும் இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் இன்னொரு தொழுகையைத் தொழுபவரின் தொழுகையானது இல்லியீன்களில் பதிவு செய்யப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
கிரகணத் தொழுகை
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்
பயணத்திலிருந்து வந்ததும் தொழுகை
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளி வாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி
Labels: நபி வழியில் நம் தொழுகை
பிரயாணத் தொழுகை
பிரயாணத் தொழுகை
கடமையான தொழுகையை குறித்த நேரத்தில் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. எனினும் பிரயாணிகளுக்கு அல்லாஹ் சில சலுகைகளை தந்துள்ளான். இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். அதைப் போன்று நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழலாம்.
சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரயாணம் செய்தாலே ஜம்வு (இருநேரத் தொழுகையை சேர்த்து தொழுதல்) கஸ்ர் (நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக குறைத்து தொழுதல்) செய்யலாம்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் கஸ்ர் செய்வார்கள்" அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்
இந்த ஹதீஸில் மைலா? பர்ஸக்கா? என்று அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். மைலை விட பர்ஸக் என்பது கூடுதலான தூரமாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் பர்ஸக்கை நாம் எடுத்துக்கொள்வோம். மூன்று பர்ஸக் என்பது 4 மைல்களாகும். அன்றைய அரபியர்களின் கணக்குப்படி இன்றைய அளவு சுமார் 25 கிலோ மீட்டர் ஆகும். எனவே, ஒருவர் 25 கி.மீ பிரயாணம் செய்தால் ஜம்வு-கஸ்ர் செய்யலாம்.
"தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத் தான் கடமையாக்கப்பட்டது. பிரயாணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த)ஊரில் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது." அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"மதினாவில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாக தொழுதேன். நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்கா செல்ல நாடி புறப்பட்டார்கள். (இடயில் உள்ள ஊரான) துல்ஹுவைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்" அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஜம்வு (சேர்த்துத் தொழுதல்)
லுஹர் நேரத்திலேயே லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழலாம். மக்ரிப் நேரத்திலேயே மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழலாம். மேலும் வெளியூர் செல்ல நாடினால் உள்ளூரிலேயே இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழலாம். எனினும், குறைக்காமல் முழுமையாகத் தொழவேண்டும்.
"சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்" அறிவிப்பவர்: அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
கஸ்ர் (குறைத்துத் தொழுதல்)
பிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு செய்யும் போது (இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்) இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும்.
"ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
பயணியாக இருந்து விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.
"நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்" என்று நான் கேட்டபோது "ஆயிஷாவே! சரியாகச் செய்தீர்" என்றார்கள். என்னைக் குறை காணவில்லை!" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
பாங்கு - இகாமத்
ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவரகள் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْ நூல்: முஸ்லிம்
Labels: நபி வழியில் நம் தொழுகை
வித்ரு தொழுகை
வித்ரு தொழுகை
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ
"இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
"வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
வித்ரு தொழும் முறை
மூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது! அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
"மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
ஐந்து ரக்அத்
ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஏழு ரக்அத்
ஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
ஒன்பது ரக்அத்
ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
குனூத் ஓதுதல்
வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:
நபி صلى الله عليه وسلم ஓதிய கூனூத்
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْ مَنْ هَدَيْتَ وَعَافِنْيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلََََّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَاقَضَيْتَ فَاِنَّكَ تَقْضِيْ وَلاَ ُيقْضى عَلَيْكَ اِنَّهُ لاَيَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ
பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.
இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
Labels: நபி வழியில் நம் தொழுகை
வித்ரு தொழுகை
வித்ரு தொழுகை
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ
"இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
"வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
வித்ரு தொழும் முறை
மூன்று ரக்அத் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் அமரக்கூடாது! அதாவது மக்ரிப் தொழுகையில் எப்படி இரண்டாம் ரக்அத்தில் அமருகிறோமோ அதைப்போன்று அமரக்கூடாது. மூன்றாம் ரக்அத்தின் இறுதியில் அமர்ந்து ஸலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருக்கூவிற்கு முன்போ, பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
"மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ
ஐந்து ரக்அத்
ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் கடைசி ரக்அத்தான ஐந்தாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து சலாம் கூறி முடிக்க வேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக்கொள்ள வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்" அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஏழு ரக்அத்
ஏழு ரக்அத் தொழும்போது இடையில் எந்த ரக்அத்திலும் அமராமல் ஏழாம் ரக்அத்தில் மட்டும் அமர்ந்து ஸலாம் கூறலாம். அல்லது ஆறாம் ரக்அத்திலும் ஏழாம் ரக்அத்திலும் அமர்ந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ
ஒன்பது ரக்அத்
ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவதாக இருந்தால் எட்டாவது ரக்அத்திலும் ஒன்பதாவது ரக்அத்திலும் அமர்ந்து ஒன்பதாம் ரக்அத்தில் மட்டுமே சலாம் கூறி முடிக்கவேண்டும். கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓதிக் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
குனூத் ஓதுதல்
வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்பதையும், அப்படி தொழும்போது கடைசி ரக்அத்தின் ருகூவிற்கு முன்போ அல்லது பின்போ குனூத் ஓத வேண்டுமென்பதையும் பார்த்தோம். இன்றைக்கு குனூத் என்ற பெயரால் சில துஆக்களை ஓதுகின்றனர். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதிய துஆ:
நபி صلى الله عليه وسلم ஓதிய கூனூத்
اَللَّهُمَّ اهْدِنِيْ فِيْ مَنْ هَدَيْتَ وَعَافِنْيْ فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلََََّنِيْ فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِيْ فِيْمَا اَعْطَيْتَ وَقِنِيْ شَرَّ مَاقَضَيْتَ فَاِنَّكَ تَقْضِيْ وَلاَ ُيقْضى عَلَيْكَ اِنَّهُ لاَيَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபீனீ ஃபீமன் ஆஃபைத்த வதவல்லனீ ஃபீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மாகளை(த்)த ஃபஇன்னக தக்ளீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹு லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த அறிவிப்பவர்: ஹஸன் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா, நஸயீ
பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொருப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரகத்(விருத்தி) செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாக்கிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! எதையும் விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார்.
இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
"உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்
Labels: நபி வழியில் நம் தொழுகை
கடமையான தொழுகைக்குப்பின் துஆ
கடமையான தொழுகைக்குப்பின்
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகிறேன்(3 முறை) யா அல்லாஹ்! நீயே சாந்தி அளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமானவன். நூல்: முஸ்லிம் 931
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். யா அல்லாஹ்! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது. நூல்: புகாரி 844, 6330
யா அல்லாஹ்! கோழத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தள்ளாத வயதுவரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்: புகாரி 2822
யா அல்லாஹ்! உன்னிஅ நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக! நூல்: அபூதாவூத்
சுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹ் அக்பர் 33 (மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் அக்பர் 34 தடவை என்றும் உள்ளது) தடவையும். ஆக மொத்தம் 99 தடவைக்குப்பின் 100 வதாக
எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்
வணக்கத்திற்குரிய அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே
Labels: நபி வழியில் நம் தொழுகை
அத்தஹிய்யாத் இருப்பு முறை
அத்தஹிய்யாத் இருப்பு முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி
இருப்பில் ஓதவேண்டியவை
"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
கடைசி இருப்பில் அமரும் முறை
"எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்" அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும்.
ஸலவாத் ஓதுதல்
اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.
ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத்
பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
"அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்" என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம்
பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய்.
அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும்.
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
"தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ
இதுதான் தொழும் முறையாகும். தொழும் முறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான். வெவ்வேறு முறைகளில்லை.
Labels: நபி வழியில் நம் தொழுகை
ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தாவின் போது
سُبْحَانَ رَبَّيَ الأَعْلَى
"ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்று ஓதுவார்கள்.
பொருள்: உயர்வுமிக்க என் இறைவன் தூயவன். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்
سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
"ஸுப்புஹுன் குத்துஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்று கூறுவார்கள்.
பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் இறைவன் தூய்மையானவன், பரிசுத்தமானவன். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃக்பிர்லீ என்று நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை
رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அபூதாவூத்
பொருள்:இறைவா! என்னை மன்னிப்பாயாக! இறைவா! என்னை மன்னிப்பாயாக!
நபி صلى الله عليه وسلم இரண்டு சஜ்தாக்களுக்கிடையே
اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
"அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ வஆஃபினி வஹ்தினீ வர்ஜுக்னீ" என்று ஓதுவார்கள்.
பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு தேவையானவற்றை வழங்குவாயாக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ
ஒற்றை ரக்அத்களிலிருந்து எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி எழவேண்டும்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றிவிட்டு எழும்போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள்" அறிவிப்பவர்: மாலிக் பின்அல் ஹூவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ
இரண்டாம் ரக்அத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், நஸயீ
இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக்கொண்டார்கள். கடைசி இருப்பின்போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
Labels: நபி வழியில் நம் தொழுகை
ஸஜ்தா செய்யும் முறை
ஸஜ்தா செய்யும் முறை
ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்
முதலாவதாக கையை தரையில் வைத்தல்
"உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முழங்கையை உயர்த்திக் கொள்ளல்
"நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்
கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும்
ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல்
ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, "முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை" என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா
Labels: நபி வழியில் நம் தொழுகை
ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்
ருகூவு செய்தல்
சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும்.
ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னுமாஜ்ஜா
நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத்
முதுகை சமமாக வைக்கவேண்டும்
நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜ்ஜா
ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்
திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்
தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
ருகூவின் போது ஓத வேண்டியவை
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" என்றும் தமது ஸஜ்தாவில் "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்றும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ
سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ "சுப்ஹான ரப்பியல் அழீம்"
பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.
سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ
ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மஃக்பிர்லீ
பொருள்: எங்கள் இரட்சகனே! உன்னுடைய புகழால் நீ தூய்மையானவன், இறைவா! எனக்கு மன்னிப்பருள்வாயாக.
سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
"ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்றும் ருகூவில் நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ
பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.
ருகூவிலிருந்து எழுதல்
ருகூவிலிருந்து எழும்போது தனது இரண்டு கைகளையும் உயர்த்தி "ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா" என்று கூற வேண்டும்
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ
பொருள்: புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை இறைவன் கேட்கிறான்.
ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும்
பின்னால் உள்ள எதையேனும் ஒன்றை கூறலாம்.
رَبَّنَا لَكَ الْحَمْدُ ரப்பனா லகல் ஹம்து
رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ ரப்பனா வலகல் ஹம்து
اللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ அல்லஹும்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)
பொருள்: இறைவா உனக்கே புகழனைத்தும்
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْئَ السَّمَوَاتِ ومِلْئَ اَلآرْضِ ومِلْئَ مَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ
அல்லஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி, வமில்அ மாஷிஃத மின்ஷையின் பஃது (நூல்: முஸ்லிம்)
பொருள்: இறைவா! பரக்கத்தும் தூய்மையும் நிறைந்த ஏராளமான புகழ் உனக்கேயுரியது.
Labels: நபி வழியில் நம் தொழுகை
தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்
தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்
ஸனா ஓதி முடித்தபின் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என்று ஆரம்பித்து "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.
"(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!" (அல்குர்ஆன் 16:98)
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
முதல் ரக்அத்தில் மட்டும்தான் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்" (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம்
ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என கூற வேண்டும்.
பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.
சூரத்துல் ஃபாத்திஹா
"சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.
"குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்" என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204)
"இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் "ஆமீன்" கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
"இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் "கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக் கூறும்போது "ஆமீன்" என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ
இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.
ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை
ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்
முழு அத்தியாயமாக ஓதுதல்
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது "முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்
குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்"(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத்
ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ
இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
Labels: நபி வழியில் நம் தொழுகை
தொழுகைக்கு முன் நிய்யத்
நிய்யத்
எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.
"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தக்பீர் தஹ்ரீமா
தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.
"நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி "அல்லாஹு அக்பர் எனக்கூறு" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்." அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்." அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்." அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்
2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்
இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:
"பலவீனமானவர்" என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். "இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் "இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல" என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.
3, "தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்" என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.
4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.
ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். "இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என நான் கேட்டேன். அதற்கு,
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!
இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,
பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
Labels: நபி வழியில் நம் தொழுகை
தொழுகைக்கு முன் நிய்யத்
நிய்யத்
எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.
"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தக்பீர் தஹ்ரீமா
தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.
"நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி "அல்லாஹு அக்பர் எனக்கூறு" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்." அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்." அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்." அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்
2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்
இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:
"பலவீனமானவர்" என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். "இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் "இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல" என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.
3, "தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்" என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.
4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.
ஸனா ஓதுதல் அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். "இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என நான் கேட்டேன். அதற்கு,
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!
இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,
பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
Labels: நபி வழியில் நம் தொழுகை
ஆடை
ஆடை
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31)
இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்
"தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.
"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
பருவமடைந்த பெண்
"பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதி
பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்
"நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் "என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது" எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்
ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் "உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
Labels: நபி வழியில் நம் தொழுகை
தயம்மும், தயம்மும் எப்படி செய்வது,
தயம்மும்
சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.
தயம்மும் எப்படி செய்வது
இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.
"நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 5:6)
"தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு "இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்" என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.
இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, "நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்" என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி "உமக்கு இரு கூலிகள் உள்ளது" என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள்
"தாதுஸ்ஸலாஸில்" எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் "அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே" என்று என்னிடம் கேட்டார்கள். "உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்" என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
Labels: நபி வழியில் நம் தொழுகை
கடமையான குளிப்பு
கடமையான குளிப்பு
தொழுகைக்கு உளூ எந்த அளவிற்கு அவசியமோ அந்த அளவிற்கு குளிப்பு கடமையானவர் குளிப்பது அவசியம். உடலுறவின் மூலமோ அல்லது உறக்கத்திலோ அல்லது விழிப்பிலோ ஆணுக்கோ பெண்ணுக்கோ விந்து வெளிப்பட்டால் குளித்தேயாக வேண்டும். குளிக்காமல் தொழக்கூடாது.
ஸ்கலிதம் ஏற்பட்டால்
"இச்சை நீர் வெளிப்பட்டால் உளூச் செய்ய வேண்டும். விந்து வெளிப்பட்டால் குளிக்க வேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்க்ள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், தாரமீ
"ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது அவசியமா?" என்று உம்மு கலைம் (ரலி), நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது "ஆம்" என்று பதிலளித்தார்கள்" அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மாதவிடாய் ஏற்படுதல்
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ, உடலுறவு கொள்ளவோ கூடாது. மாதவிடாய் நின்ற பிறகு குளித்து தூய்மையானதும் தொழலாம் நோன்பு நோற்கலாம்.
"மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுதுகொள்!" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மாதவிடாய் காலங்களில் விடுபட்ட தொழுகைகளைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை
"எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது தொழுகை, நோன்பு ஆகியவைகளை விட்டு விடுமாறும், மாதவிடாய் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்குமாறும் விடுபட்ட தொழுகைகளைத் தொழ வேண்டியதில்லை என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
பிரசவ இரத்தப் போக்கு சம்பந்தமாக நேரடியாக ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மாதவிடாய் இரத்தப் போக்குக்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும் பொருந்தும்.
தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்டால்
பெண்களில் சிலர் மாதவிடாயின் போது மட்டுமின்றி எப்போதும் இரத்தப் போக்கு உள்ளவர்களாக இருப்பர். இது ஒரு வகை நோய். இதன் காரணமாக தொழுகையையும் இதர வணக்கங்களையும் விட்டுவிடக் கூடாது!. அவர்களின் வழமையான மாதவிடாய் நாட்கள் முடிந்து குளித்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியால் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்செய்து தொழ வேண்டும்.
ஃபாத்திமா பிந்த் அபீஹுபைஷ் (ரலி) என்ற பெண்மனி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "நான் இரத்தப் போக்குடையவளாக இருக்கிறேன், தூய்மையாவதே இல்லை. எனவே தொழுகையை நான் விட்டு விடலாமா?" எனக் கேட்டார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் "உனது மாதவிடாய் நாட்களில் மட்டும் தொழுகையை விட்டுவிட்டு, குளித்து தொழுவாயாக! இரத்தம் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை!" என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் ஒரு பெண் இரத்தப் போக்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்காக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் நான் சட்ட விளக்கம் கேட்டபோது, இந்த நோய் வருவதற்கு முன் அந்த பெண்ணுக்கு வழக்கமாக மாதவிடாய் வந்து கொண்டிருந்த நாட்களைக் கழித்து அந்த நாட்கள் முடிந்ததும் குளித்துவிட்டுத் துணியால் இறுகக் கட்டிக்கொண்டு அவள் தொழவேண்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் நஸயீ
அபூதாவூதின் அறிவிப்பில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்துகொள்! என்று காணப்படுகின்றது.
குளிக்கும் முறை
கடமையான குளிப்பை நிறைவேற்று முன் மர்மஸ்தானத்தைக் கழுவி உளூச் செய்து கொள்ள வேண்டும். உடல் முழுவதும் தண்ணீர் பட்டு நனையுமாறு குளிக்க வேண்டும். குளித்தபின் தொழ வேண்டியிருந்தால் மறுபடியும் உளூச் செய்ய வேண்டியதில்லை. குளிக்கும் போது செய்த உளூவே போதுமானது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தம் இரு கைகளையும் கழுவிவிட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது கைகளின் மீது (சிறிதளவு தண்ணீர்) ஊற்றி இரண்டு, மூன்று முறை கழுவினார்கள். பின்பு வலக்கரத்தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத்தில் ஊற்றி மர்ம ஸ்தானத்தைக் கழுவினார்கள். பின் தம் கைகளைத் தரையில் தேய்த்தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து, மூக்கையும் சுத்தம் செய்து முகத்தைக் கழுவினார்கள். இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தமது மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். பின்பு சற்று விலகி நின்று தம் கால்களைக் கழுவிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: மைமூனா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் குளித்தபின் உளூச் செய்ய மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
பெண்கள் சடை போட்டிருந்தால்
சடை போட்டுள்ள பெண்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது சடையை அவிழ்த்து விட வேண்டிய அவசியமில்லை.
"இறைத்தூதரே! நான் எனது தலை முடியை சடை பின்னிக்கொண்டு இருக்கிறேன்! கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்த்துத்தான் விட வேண்டுமா?" என நான் கேட்டேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் "வேண்டியதில்லை, உனது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கொள்" என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
Labels: நபி வழியில் நம் தொழுகை
தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத்
அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது
மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை.
கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல்
உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்" என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
காலுறைகள் மீது மஸஹ் செய்தல்
ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும்.
நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது "ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை" என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, இப்னுகுஸைமா
உளூச் செய்தபின் கூறவேண்டியவை
أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
Labels: நபி வழியில் நம் தொழுகை
பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்
பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்
بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.
உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்
நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா
கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.
"உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது" என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்
உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
"என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
முகம், கைகளை கழுவுதல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
Labels: நபி வழியில் நம் தொழுகை
தொழுகையின் அவசியம்
தொழுகையின் அவசியம்
இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)
"நிச்சயமாக தொழுகை மூஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது" (அல்குர்ஆன் 4:103)
"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)
"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
ஏழு வயதானதும் குழந்தைகளுக்கு தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்
குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை எய்தி விட்டால் அடித்தாவது தொழச் சொல்லுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
ஏழு வயதையடைந்து விட்டால் குழந்தைக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸப்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், தாரமி, தாரகுத்னீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது மரண வேளையில் கூடத் தொழுகையைப் பேணுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: இப்னுமாஜ்ஜா
தொழாதவர் காஃபிராகி விட்டார்
(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைத்தல் குஃப்ர் இவற்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
தமக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ, அபூதாவூத்
இத்தகைய முக்கயத்துவம் வாய்ந்த தொழுகையை நிறைவேற்றாமல் அக்கறையின்றி இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தொழுகையின் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டியது நம்மீது கடமையாகும்.
தொழுகையை முஸ்லிம்கள் பலவாறாகத் தொழுகின்றனர். அவர்கள் தொழும் முறை சரிதானா என்பதை அறியாமலேயே தொழுகின்றார்கள். தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அத்தொழுகை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுதது போன்றுதான் அமைய வேண்டும். ஏனெனில்,
"என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி,
உளூவின் அவசியம்
உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும்.
"மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள்" என இறைவன் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் 5:6)
"உளூ நீங்கி விட்டால் மீன்டும் உளூச் செய்யாமல் தொழும் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُநூல்: முஸ்லிம்
உளூச் செய்யும் முன் நிய்யத் எனும் எண்ணம் வேண்டும்
நிய்யத் எனும் எண்ணமின்றி கழுவப்படவேண்டிய உறுப்புகளைக் கழுவினாலும், உடல் நனையும்படி குளித்தாலும் கூட அது உளுவாகாது. ஏனெனில், "நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ, உடமைகளையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவ்விப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
நிய்யத் வாயால் மொழிவது இல்லை. வாயால் மொழியும்படி நபி صلى الله عليه وسلم அவர்களும் கற்றுத்தரவில்லை
Labels: நபி வழியில் நம் தொழுகை